2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2016 ஜூன் 08 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில், இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, ஒலிவாங்கிகளும் செவிப்பணிகளும் செயலிழந்தமையால், சபை நடவடிக்கைகள், நாளை வியாழக்கிழமை (09) காலை 9.30 மணிவரை  ஒத்திவைக்கப்பட்டன.

சபை அமர்வின் போது, பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இணங்க, பிற்பகல் 1.30க்கு வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போதே, ஒலிவாங்கிகளும் செவிப்பணிகளும் செயலிழந்தன. இதனையடுத்து, சபை அமர்வுகளை 5 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார். 

5 நிமிடங்கள் கடந்த நிலையில், சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், , ஒலிவாங்கிகளும் செவிப்பணிகளும் இயங்கவில்லை. இதனால், சபை நடவடிக்கைகளை நாளை வரை, சபாநாயகர் ஒத்திவைத்தார்.

நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில், இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, ஒலிவாங்கிகளும் செவிப்பணிகளும் செயலிழந்தமையால், சபை நடவடிக்கைகள், 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

சபை அமர்வின் போது, பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இணங்க, பிற்பகல் 1.30க்கு வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போதே, ஒலிவாங்கிகளும் செவிப்பணிகளும் செயலிழந்தன. இதனையடுத்து, சபை அமர்வுகளை 5 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.  

- See more at: http://www.tamilmirror.lk/174227/%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%A9-#sthash.Rd6XQSFw.dpuf

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .