2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நீண்டகாலம் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தல்

Kanagaraj   / 2015 நவம்பர் 30 , மு.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மற்றும் அவசர காலச்சட்ட ஒழுங்கு விதிகளின் கீழ்,  நம்பிக்கையான சாட்சிகள் இன்றி நீண்ட நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை, விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மற்றும் அவசர காலச்சட்ட ஒழுங்கு விதிகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள், விளக்கமறியலில் வைக்கப்படும் வரையிலும் அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் அவ்வாணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பில், சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நம்பிக்கையான சாட்சிகள் இன்றி நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அல்லது அவசரகாலச் சட்ட ஒழுங்கு விதிகளின் கீழ் அதிகுற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நம்பிக்கையான சாட்டிகள் இல்லாமல், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீண்ட நாட்களுக்கு தடுத்து வைத்திருந்தால் அல்லது விளக்கமறியலில் வைத்திருந்தால் அவர்களை பிணையில் விடுவிக்குமாறும் அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல, கைதிகள் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான புனர்வாழ்;வு நடவடிக்கை தொடர்பில் தங்களுடைய கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் அவ்வாணைக்குழு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .