2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நீதிமன்றமே பார்த்துக்கொள்ளும்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ் 

“லங்கா ஈ நியுஸ் இணையத்தள ஆசிரியருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட  சர்வதேச பிடியாணை குறித்து, நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து கொள்ள முடியும். அது தொடர்பில், நாம் எதுவும் செய்ய முடியாது” என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். 

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (30) இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் கூறினார். 

“தன் மீது குற்றமில்லை என்றால், தாம் வெளியிட்ட செய்தி குறித்து உரிய ஆதாரங்கள் இருந்தால், அதனை நீதிமன்றில் சமர்ப்பித்து, அது தொடர்பில் சட்டத்தின்படி தீர்வு காணவேண்டும். 

நாட்டில் உள்ள இணையத்தளங்கள், சட்டத்தை மீறிச் செயற்படும் போது, பொதுமக்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் போதும், அசௌகரியங்களை ஏற்படுத்தும் போதும், சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். அதில், அரசியல் எதுவும் இல்லை.

இந்த இணையத்தளம் குறித்து, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கோ, அதன் பின்னர் அந்த ஆசிரியருக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டமைகோ, தொடர்பு இல்லை. அது நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. அது குறித்து நீதிழமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, அமைச்சர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .