2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி

Thipaan   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு, உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தலைமையிலான
நீதியரசர்கள்  குழு, இன்று அனுமதியளித்துள்ளது.

இலஞ்ச, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அவர் சமுகமளிக்காமையினால், ஆணைக்குழுவை அவமதித்ததாக உயர் நீதிமன்றத்தில், ஜூன் மாதம் 30ஆம் திகதி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .