2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நியூசிலாந்து செல்ல முயன்ற இலங்கை அகதிகள் கைது

Gavitha   / 2016 ஜனவரி 21 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில், படகொன்றின் மூலம் நியூசிலாந்துக்குச் செல்ல திட்டமிட்ட ஆறு இலங்கை அகதிகளை, 'கியூ' பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் ராயனூரிலுள்ள முகாமிலிருந்து கே. ஜயராஜ் (வயது 34), ஏ.சந்திரகுமமார் (வயது 36) ஆகிய இருவரும் கோட்டப்பட்டிலுள்ள இலங்கை முகாமில் இருந்து சி.பிரதீபன் (வயது 27), ஆர்.பிரபு (வயது 25) மற்றும் எம்.பிரதீப் (வயது 21), கரூர் மாவட்டத்திலுள்ள கருமத்தப்பட்டியின் முகாமிலிருந்து எஸ்.ஸ்ரேஸ்வரராஜா (வயது 34) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்துக்கு தலைமை தாங்கி ஜயராஜ் என்பவர், படகின் மூலம் நியூசிலாந்துக்குச் செல்வதற்கு ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 1 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X