Janu / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 22 இளம் பிக்குகளின் வெளிநாட்டுபயணங்களை ஏற்பாடு செய்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான பிக்குவை, வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேக நபரான பிக்கு திங்கட்கிழமை (27) அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தாய்லாந்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொள்வதாக கூறி, அங்கு சென்ற இளம் பிக்குகளை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago