Editorial / 2026 மார்ச் 22 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நிலவும் சவால்களைக் கருத்திற்கொண்டு, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் நாளை (24) எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சமீபத்திய எரிபொருள் விலை உயர்வு பேக்கரி தொழில்துறையில் பல சவால்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் காரணமாக விலைத் திருத்தம் அவசியமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நாளை (24) நடைபெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து, அனைத்து வகையான பேக்கரி பொருட்களுக்கான திருத்தப்பட்ட புதிய விலைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago