2025 மே 10, சனிக்கிழமை

பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்தியா

Freelancer   / 2025 மே 09 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான எப் 16 விமானம் மற்றும் 2 ஜேஎப் போர் விமானங்களை இந்திய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 பாகிஸ்தான், காஷ்மீரில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய இராணுவம் எஸ் 400 வான்பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் அவை சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான எப் 16 போர் விமானம் உள்ளிட்ட 3 போர் விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பு நேற்று மாலை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய விமானப்படை நிலையமான சர்கோதா விமான தளத்திலிருந்து எப் -16 புறப்பட்டது. இந்திய வான் ஏவுகணை சர்கோதா விமான தளத்திற்கு அருகில் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்திய படை வட்டாரங்கள் தெரிவித்தன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X