Freelancer / 2026 ஜனவரி 04 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
2026 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணையை அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள் நாளை முதல் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு டிசம்பர் 22 ஆம் திகதியும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 26 ஆம் திகதியும் 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை முடிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (a)
7 minute ago
20 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
41 minute ago