Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 மே 19 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள 'மிஹிந்து செத் மெதுர' சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார்.
படையினரைச் சந்தித்து அவர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள் வரைந்த ஓவியங்கள் மற்றும் படைப்புகளைப் பார்வையிட்டார்.
முப்பது வருட யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் தெற்கில் ஏராளமானோர் உயிர்களையும் கைகால்கள் மற்றும் உடல் அங்கங்களை இழந்து நிரந்தரமாக ஊனமுற்றதாக தெரிவித்த ஜனாதிபதி , இதுபோன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் வலியுறுத்தினார்.
ஊனமுற்ற படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மிஹிந்து செத் மெதுரா சுகாதார விடுதியில் பணிபுரியும் மருத்துவர்கள் தலைமையிலான உத்தியோகஸ்தர்களுடனும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
படையினருக்கு மேலும் மருத்துவ மற்றும் சேவை வசதிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ,மிஹிந்து செத் மெதுர பொறுப்பதிகாரி பிரிகேடியர் டபிள்யூ. ஜீ. எஸ். டீ. எஸ். ராஜகருணா, இராணுவ சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூ. ஏ. எஸ். விஜயதாச உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிநிலை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .