Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 23 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதானை பொலிஸ் நிலையத்தில் வவுனியா பெண் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. யான சிறீதரன் தெரிவித்தார்.எனினும் இது தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) விசேட கூற்றை முன்வத்த சிறீதரன் எம்.பி. அந்த யுவதி கொலைச்செய்யப்பட்டுள்ளார் என்றார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
மருதானை பொலிஸ் நிலையத்தில் வவுனியாவை சேர்ந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால், அவர் தற்கொலை செய்யவில்லை . பொலிஸ் நிலையத்திற்குள் அவர் எவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முடியும்? அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஒரு கைதியான அவர் எவ்வாறு மரணத்தை தழுவ முடியும்?
இது ஒரு பயங்கரமான செய்தி. எனவே இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜே பால,நீதியைப்பெற்றுத்தர வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நீங்கள் முன்வைத்துள்ள இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினத்துக்குள் (23) ஆராய்ந்து உங்களுக்கு பதில் வழங்குவேன் என்றார்.
பின்னர் இதற்கு பதில் வழங்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
வவுனியாவை சேர்ந்த குறித்த பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஐந்து வழக்குகளில் பிரதிவாதியாக இருந்து பிடியாணையில் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை (22) துரதிஸ்டமான சம்பவம் நடந்துள்ளது. பிரேத பரிசோதனை வியாழக்கிழமை (23) நடைபெற்றது. அதில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago