2026 ஜனவரி 14, புதன்கிழமை

பண்டிகை காலத்தில் மக்களுக்கு அதிர்ச்சி

Freelancer   / 2026 ஜனவரி 14 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் மாதம் நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மரதகஹமுல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்தார்.  

இதேவேளை, சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியின் விலை அதிகரிக்கும் போது, விவசாயிகள் அவற்றை பயிரிடச் செல்வதால் வெள்ளை பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும். ஆகையால் நெல் விலை அதிகரிப்பதாயின், இந்த மூன்று வகைகளுக்கும் விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும். 

பண்டிகை காலத்தில் சம்பா மற்றும் கீரி சம்பா விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .