Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஜனக பண்டாரவுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு எதிராக ஆணைக்குழு அளித்த பரிந்துரைகளை இரத்து செய்யக் கோரி சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஜனக பண்டார தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்தே இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த மனுவில், ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசருமான உபாலி அபேரத்ன, உறுப்பினர்களான சந்திரசிறி ஜயதிலக மற்றும் சந்திரா பெர்னாண்டோ, ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஆணைக்குழு விசாரணைகளை நடத்திய விதம் முற்றிலும் சட்டவிரோதமானது என்பதால் ஆணைக்குழுவின் அறிக்கையில் தனக்கெதிரான பரிந்துரைகள் மற்றும் செயல்படுத்துவதை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு ஜனக பண்டார தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago