2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பண்டித் அமரதேவவின் இறுதிக் கிரியை இன்று

Princiya Dixci   / 2016 நவம்பர் 05 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வியாழக்கிழமை (03) காலமான பாடகர் பண்டித் அமரதேவவின் இறுதிக் கிரியை, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில், இன்று சனிக்கிழமை (05) மாலை 6 மணிக்கு இடம்பெறும் என்று, பாடகர், பாடகிகள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி பெஸ்குவல் தெரிவித்தார்.  

அவரது உடலம், கொழும்பு டொரின்டனிலுள்ள சுதந்திரச் சதுக்கத்தில், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை 3.30 மணியளவில், மதச் சடங்குகள் ஆரம்பமாகி, அதன் பின்னர், உடலம் பூரண அரச மரியாதையுடன் தகனம் செய்யப்படுமென்று, அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .