Lenin Raj / 2026 மே 18 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

மனித அபிவிருத்திக்கான பங்குபற்றுதல் வழிமுறைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளையும் திறன்விருத்திப் பயிற்சிகளையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘காவியா’ சுய அபிவிருத்திப் பெண்கள் நிலையம் முன்னெடுத்து வருகின்றது.
இந்நிகழ்வு, Search for Common Ground (SFCG) அமைப்பின் திட்டத்தின்கீழ், UNDP நிறுவனத்தின் நிதியுதவியுடன் இடம்பெற்று வருகின்றது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று (18.05.2026) உதவி உள்ளூராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் எம். ஆர். எப். ரிப்கா தலைமை தாங்கியதுடன், உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் பெண்களின் வகிபாகம் குறித்தும் ஆராயப்பட்டது.
இதில் இருபது உள்ளூராட்சி மன்றப் பெண் பிரதிநிதிகள் பங்குபற்றினர். அவர்கள், தாம் பெண் பிரதிநிதிகளாகச் செயற்படும்போது எதிர்கொள்ளும் சிரமங்கள், அனுபவங்கள் குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசித்தனர்.
மேலும், இந்நிகழ்வில் பெண்களது பங்களிப்பையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago