Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
1998 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தனியார் பாதுகாப்பு முகவர் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி அமைச்சின் கீழ் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ள தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களின் ஒழுங்குமுறை மற்றும் பதிவுக்கான உரிம நிபந்தனைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும் உரிமம் காலாவதியாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அடுத்த 02 வருடங்களுக்கான நீடிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் செயல்படுவது 1998 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தனியார் பாதுகாப்பு முகமைகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அது எச்சரித்தது.
பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.defence.lk ஊடாக தனியார் பாதுகாப்பு முகவர் உரிமம் மற்றும் பதிவு நீடிப்புக்கான மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களைப் பெறலாம். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
2 hours ago