2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பொதுமக்களுக்காக புதிய வாட்ஸ் அப் எண் அறிமுகம்

Janu   / 2025 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை பொலிஸார் அர்ப்பணிப்புடன் தனது கடமைகளை செய்து வருகின்ற நிலையில் குற்றங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகள் தொடர்பாக  உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்கக்கூடிய வகையில் 071 - 8598888 என்ற  புதிய வாட்ஸ் அப் தொலைபேசி எண்ணை  இலங்கை பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (IGP) வழக்கறிஞர் பிரியந்த வீரசூரிய புதன்கிழமை (13) அறிமுகப்படுத்தியுள்ளார்.

பொதுமக்கள் இந்த வாட்ஸ்அப் தொலைபேசி எண் ஊடாக குறுஞ்செய்திகள், காணொளிகள் மற்றும் புகைப்படங்களை நேரடியாக ஐ.ஜி.பிக்கு அனுப்ப மட்டுமே முடியும், எனவும்  தொலைபேசி அழைப்புகளை பெறுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பொலிஸ் அதிகாரிகளும் தங்கள் பிரச்சினைகள் மற்றும் தகவல்களை இதன் மூலம் தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .