2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

புதிய ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

Simrith   / 2025 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக நியமிக்கப்பட்ட ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் Colonel Keith Miles, இன்று (ஆகஸ்ட் 14) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயாகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

 

இலங்கையில் சேவையை நிறைவு செய்து வெளியேறும் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டேரன் வூட்ஸுடன் அவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்.

இதன்போது நடந்த சுமூக கலந்துரையாடல்களின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பரஸ்பர புரிதலை வளர்த்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் வழிகள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

இலங்கையில் தனது உத்தியோகபூர்வ சேவையை ஆரம்பிக்கும் கேணல் மைல்ஸுக்கு பாதுகாப்பு செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். வெளியேறும் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் வூட்ஸுக்கு தனது பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக, நன்றி தெரிவித்ததுடன் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .