2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

பதவி உயர்வு, சம்பள அதிகரிப்புக்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவு

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி, இலங்கை போக்குவரத்து சபையின் சேவையாளர்களுக்கு பதவி உயர்வு, சம்பள அதிகரிப்பை வழங்குவதைத் தடைசெய்யுமாறு, உயர்நீதிமன்றத்தில் இன்று தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ, விஜித் மலல்கொட ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தால் இத்தடையத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த த​டையுத்தரவு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை சுதந்திர தேசிய சேவை சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரித்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .