J.A. George / 2021 ஏப்ரல் 09 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் உயிரிழந்த ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அங்கொட லொக்காவினால் பல்வேறு குற்றச் செயல்களுக்கு ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
'சீட்டி' என அழைக்கப்படும் 47 வயதுடைய சரத் குமார என்பவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முல்லேரியாவில் வைத்து இன்று(09) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைக் கூறினார்.
கடந்த நவம்பர் 12ஆம் திகதி வெலிகமவில் 112 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 9ஆவது சந்தேக நபர் இவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
சந்தேக நபர் முல்லேரியாவில் உள்ள தனது வீட்டில் பதுங்கு குழியொன்றை அமைத்து மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
30 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago