2025 ஜூலை 14, திங்கட்கிழமை

“பொதி செய்யப்படாத எண்ணெய் விற்பனை நிறுத்தப்படும்”

S.Renuka   / 2025 ஜூலை 14 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனையை நிறுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தேங்காய் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சாந்த ரணவக்க  தெரிவித்தார்.

ஊடக சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (13) அன்று இடம்பெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் பல்வேறு வகையான எண்ணெய்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த எண்ணெய்களை உட்கொள்வதால் தொற்றாத நோய்கள் ஏற்படும் என்று பலர் கூறுவதாகவும் அவர் கூறினார்.

எனவே, தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் சந்தையில் வெளியிடப்படும் எண்ணெய்யை உற்பத்தியாளர் உட்பட தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய பொதியுடன் சந்தைக்கு வெளியிட வேண்டும் என்று அவர்  தெரிவித்தார்.

இந்த சூழ்நிலைக்கு ஏற்ப சில மாதங்கள் அவகாசம் அளிப்பதாகவும், பின்னர் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

சந்தையில் தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் கலப்பட எண்ணெய் விற்பனையைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .