2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Freelancer   / 2025 செப்டெம்பர் 20 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். காங்கேசன் துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில்  ஐஸ், கஞ்சா போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது போதை மாத்திரை மற்றும் ஐஸ் போதைப் பொருள்கள் போன்றனவற்றை பாடசாலை மாணவர்கள் மற்றும் இளம் சமுதாயத்திற்கு விற்பனை செய்து வந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 20 போதை மாத்திரைகளும் 12370 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 61000 மில்லி கிராம்  கஞ்சாவும் மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்த பணமும் அவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட கூரியவால் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

மேற்படி, சந்தேகநபரையும் சான்று பொருள்களையும் வெல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர்  வழிநடத்தலில் இடம்பெற்றதாக காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X