Editorial / 2026 மே 01 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒரு பவுன் தங்க மோதிரத்தில் சிக்கித் தவித்த சாரைப்பாம்பு ஒன்றை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம், கேரள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கேரளாவில் புதிதாக வீடு கட்டி வரும் தம்பதியினர், வீட்டின் அருகே தற்காலிகமாக ஒரு ஷெட்டு அமைத்துத் தங்கியுள்ளனர். சம்பவத்தன்று அங்குள்ள மேசைக்குக் கீழே ஒரு பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் வழங்கினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், அங்கு சுமார் 4 அடி நீளமுள்ள ஒரு சாரைப்பாம்பு இருப்பதைக் கண்டறிந்தனர். அந்தப் பாம்பின் உடலில் ஒரு பவுன் எடையுள்ள தங்க மோதிரம் ஒன்று பலமாகச் சிக்கியிருந்தது. அந்த மோதிரத்திலிருந்து விடுபட முடியாமல் பாம்பு தவித்துக் கொண்டிருந்தது.
பாம்பிற்கு அதிக வலி ஏற்படாத வகையில், வனத்துறையினர் அந்த மோதிரத்தை மிகவும் லாவகமாக வெட்டி பாம்பை மீட்டனர். மோதிரம் இறுக்கமாகச் சிக்கியிருந்ததால் பாம்பின் உடலில் ஏற்பட்ட காயத்திற்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அந்தப் பாம்பு பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்பட்டது.
தங்க மோதிரத்தில் பாம்பு சிக்கிய இந்த விசித்திரச் சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago