Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Simrith / 2023 செப்டெம்பர் 28 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கசிப்பு வியாபாரி ஒருவரின் வீட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது இளைஞர்கள் குழுவினால் தாக்கப்பட்ட பொலிஸ் சர்ஜன்ட் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிகவெரட்டிய பன்சியகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சர்ஜன்ட் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கசிப்பு வியாபாரம் செய்வதாக கூறப்படும் நபரின் வீட்டில் விருந்தை முடித்துக் கொண்டு குறித்த பொலிஸ் சர்ஜன்ட் தனது வீட்டிற்கு திரும்பும் போது , அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதனையடுத்து இளைஞர் குழு பொலிஸை சரமாரியாக தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்காளாகிய பொலிஸ் சர்ஜன்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago