Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவரைக் கொழும்பில் உள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, வடக்கு - கிழக்கில் தொடரும் இராணுவத்தினரின் அராஜகத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசுக்குச் சர்வதேச நாடுகள் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மேலும் தெரிவிக்கையில்,
பிரிட்டன் தூதுவருடனான சந்திப்பின்போது வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதில் முக்கியமாக மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் , அரசியல் கைதிகள், செம்மணி, காணிப் பிரச்சினைகள், இராணுவத் தலையீடு குறித்தும், அதிகளவு இராணுவப் பிரசன்னத்துக்கு எதிராக நடந்து முடிந்த ஹர்த்தால் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதனுடன் அரசின் வடக்கு - கிழக்குக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது என்றார். (a)
18 minute ago
24 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
27 minute ago