2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பிரபாகரன் ’’ஒரு தாயைப் போன்றவர்’’: விஜய்

Editorial   / 2025 செப்டெம்பர் 22 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை தமிழ் மக்களுக்கு "ஒரு தாயைப் போன்றவர்" என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் நடந்த தேர்தல் பேரணியில் தெரிவித்துள்ளார்.

 "உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எங்கள் உறவினர்களான ஈழத் தமிழ் மக்கள், தாய் பாசத்தைக் காட்டிய ஒரு தலைவரை இழந்து தவிக்கின்றனர். எனவே, அவர்களுக்காகப் பேசுவது எங்கள் கடமை."எனவும் அவர் குறிப்பிட்டார்.

 நாகப்பட்டினம் போன்ற பெரிய கடற்றொழில் சமூகம் உள்ள பகுதிகளில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை ஓர் உணர்ச்சிகரமான பிரச்சினையாகக் கருதப்படுகிறது.

2008 ஆம் ஆண்டில், இலங்கைத் தமிழர்களின் சார்பாக விஜய் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இருப்பினும், அரசியல் விமர்சகர்கள் இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதும், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும் ஒன்றல்ல என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

 

 பிரபாகரனைப் புகழ்வதைத் தவிர, கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தனது கட்சியின் முக்கிய குறிக்கோள் என்று விஜய் கூறினார். மேலும், எம்.கே. ஸ்டாலின் அரசாங்கத்தையும் விமர்சித்த அவர், மீன்பிடிப் பிரச்சினைகளைத் தீர்க்க தனது கட்சி நீண்ட கடிதங்களை எழுதாது, மாறாக தீர்வுகளைத் தேடும் என்றும் கூறினார்.

 

"கடற்றொழிலார்களின் உயிர்கள் முக்கியம். ஆனால் ஈழத் தமிழர்களின் உயிர்களும் எங்களுக்கு சமமாக முக்கியம்" என்று கூறி முடித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .