2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பரிஸ் கிளப் வெளியிட்ட முக்கிய அறிக்கை

Freelancer   / 2022 செப்டெம்பர் 03 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான கடன் நிவாரண நடவடிக்கையை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக, பரிஸ் கிளப் (Paris Club) அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பரிஸ் கிளப் அல்லாத இருதரப்பு கடன் வழங்குநர்களை பரிஸ் கிளப் ஒருங்கிணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை பரிஸ் கிளப் வரவேற்றுள்ளது.

கடனாளி நாடுகள் அனுபவிக்கும் கொடுப்பனவு சிரமங்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் நிலையான தீர்வுகளை கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கும் பெரிய கடன் வழங்கும் நாடுகளின் அதிகாரிகள் குழுவே பரிஸ் கிளப் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .