Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 07 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனிலே, மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06), இலங்கை வந்தடைந்தார்.
இனமோதல்களில் பாலியல் வன்முறைகள் தொடர்பான பிரித்தானிய பிரதமரின் விசேட பிரதிநிதியாகவும் கடமையாற்றும் இவர், தனது பதவிக் காலத்தில், இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருந்து பலதரப்பட்ட அரச மட்ட சந்திப்புகளில் ஈடுபடவுள்ள அவர், நாளை செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு, வடமாகாண ஆளுநரையும் முதலமைச்சரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இந்தப் விஜயத்தின் போது, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பலப்படுத்துதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான இலங்கையின் முன்னெடுப்புகள் தொடர்பாக, அவதானம் செலுத்தவுள்ளார்.
இவை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் கலந்துரையாடவுள்ள அவர், எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும் பிரித்தானிய நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்ட மிதிவெடி அகற்றிய பகுதிகள் மற்றும் அங்கு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago