Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kanagaraj / 2015 நவம்பர் 14 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை அடுத்து பரிஸில் அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்ததையடுத்து பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே அமைச்சரவை கூட்டத்தைகூட்டி ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்ய உத்தரவு பிறப்பித்தார் அதிபர் ஹோலாண்டே. சர்வதேச எல்லைகளை மூடவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கால்பந்தாட்ட போட்டியை பார்வையிடுவதற்காக சென்றிருந்த பிரான்ஸ் அதிபர் ஹோலாண்டை இலக்குவைத்து இந்த தற்கொலைக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளன.
இந்த சம்பவங்களை உலக நாட்டுத்தலைவர்கள் கண்டித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மனிதாபிமானமற்ற செயலென தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சம்பவத்தில் பலியான குடும்பங்களின் உறவினர்களுக்கு வேதனையை தெரிவித்துள்ளதுடன் இந்த சம்பவங்களுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிராத்திக்குமாறு கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago