2026 ஜனவரி 14, புதன்கிழமை

புறப்பட முன் மஹிந்தவை சந்தித்த ஜூலி சங்

Janu   / 2026 ஜனவரி 14 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்றது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதராக தனது இராஜதந்திர சேவையை முடித்துக்கொண்டு எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளார்.   

இச் சந்திப்பின் போது ஜூலி சங், அவரது பதவிக் காலத்தில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்புவதற்கு மற்றும் வலுப்படுத்துவதற்கு  ஆற்றிய சேவையைப் பாராட்டி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .