Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சப்ரகமுவ பல்கலைக்கழக வளாகத்தை சட்டவிரோதமாக ஒளிப்பதிவு செய்த, இளைஞனை இம்மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பலாங்கொடை நீதவான் ஜயருவன் திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞரொவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபருடன் இருந்த குறித்த பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவனொருவரை 50,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பிணையில் விடுதலை செய்யப்பட்ட மாணவரும் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் இவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று குறித்த மாணவனுடன் வந்த சந்தேகநபர், மோட்டார் சைக்கிளில் பயணித்தவாரே, பல்கலைக்கழகத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதன்போது, பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளால், சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடையடுத்து சந்தேநபர்கள் கைதுசெய்யப்பட்டு, இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago