2025 மே 09, வெள்ளிக்கிழமை

போலி கஜமுத்துடன் நால்வர் கைது

Freelancer   / 2023 செப்டெம்பர் 30 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலியாக தயாரிக்கப்பட்ட கஜமுத்துடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த வானொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெஹியோவிட்ட பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பை, செப்டெம்பர் 29ஆம் திகதியன்று மேற்கொண்டிருந்த போதே இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 24வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவித்த தெஹியோவிட்ட பொலிஸார், சந்தேகநபர்களிடம் இருந்து 19 கிராம் 400 மில்லிகிராம் நிறையைக் கொண்ட கஜமுத்துவையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாவனெல்ல மற்றும் பிலிமத்தலாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X