Editorial / 2025 டிசெம்பர் 29 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சாரம், எரிபொருள், பெட்ரோலியம், எரிவாயு விநியோகம் ஆகிய சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் விதிகளின்படி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த வர்த்தமானி அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை (29) அன்று வெளியிட்டுள்ளார்,
வர்த்தமானி அறிவிப்பின்படி, மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆம்புலன்ஸ் சேவைகள், பயணிகள் அல்லது பொருட்களை கொண்டு செல்வதற்கான பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் நீர் மற்றும் வடிகால் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளும் இதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும், அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் தொடர்புடைய கள அளவிலான அதிகாரிகளால் செய்யப்பட வேண்டிய அனைத்து சேவைகளும் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரசு வங்கி மற்றும் காப்பீட்டு சேவைகளும், நீர் வழங்கல், மின்சாரம், கழிவுநீர் அமைப்பு, தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள், குப்பை சுத்திகரிப்பு மற்றும் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட உள்ளூர் அரசாங்க நிறுவனங்களால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் இந்த அறிவிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன என்று அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago