2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

போலி பொலிஸ் பரிசோதகர் கைது

Editorial   / 2025 ஜூலை 30 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமைப் பொலிஸ் பரிசோதகர் என்று கூறி, தங்கோவிட்ட பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் உதவி கோரியதாகக் கூறப்படும் ஒருவர் செவ்வாய்க்கிழமை (29) கைது செய்யப்பட்டதாக தங்கோவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேவெல்தெனியவைச் சேர்ந்த 48 வயதுடையவர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், சந்தேக நபர் கொழும்பு-நகர வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பிரதேச போக்குவரத்து அதிகாரிகளிடம் தன்னை ஒரு பொலிஸ் பரிசோதகர் மற்றும் தலைமை பொலிஸ் பரிசோதகர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .