Janu / 2025 நவம்பர் 10 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, மட்டு மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் கணவரும் பிள்ளையானின் மொழி பெயர்ப்பாளருமான நபரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டு. நீதவான் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டு்ள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஊழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (07) இரவு முதலியார் வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்ட, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் மொழிப்பெயர்பாளரும், மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வரின் கணவருமான நபர், 5 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த அதிகாரிகள், வீதியில் உள்ள வீடொன்றில் தச்சு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூழாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை 250 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சனிக்கிழமை(08) அன்று ஆஜர்படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து 250 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட தச்சு தொழிலாளி பிணையில் விடுவிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
க.சரவணன்
34 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
56 minute ago
1 hours ago