Janu / 2026 மே 17 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி, கொஸ்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகா இந்துருவ பகுதியில் உள்ள இடிந்து விழுந்த பாழடைந்த மடப்பள்ளி (ஆலய சமையலறை) ஒன்றிலிருந்து, அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொஸ்கொடை, மகா இந்துருவ பகுதியில் உள்ள இடிந்து வீழ்ந்த நிலையிலான கட்டடம் ஒன்றினுள் சடலமொன்று காணப்படுவதாக, சனிக்கிழமை (16) பிற்பகல் கொஸ்கொடை பொலிஸ் நிலையத்திற்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த தகவலுக்கமைய, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் மற்றும் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது போன்ற விபரங்களை அறியப் பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் மீதான நீதிவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக, சடலமானது தற்போது பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
49 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
3 hours ago