2026 மே 17, ஞாயிற்றுக்கிழமை

கனேடியருக்கு ‘ஹண்டா’ வைரஸ் பாதிப்பு

Editorial   / 2026 மே 17 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொண்டுராஸ் (Honduras) சொகுசுக் கப்பலில் பயணம் செய்த நான்கு கனேடியர்களில் ஒருவருக்கு, தற்போது ‘ஹண்டா’ (Hanta) வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சொகுசுக் கப்பலில் பயணித்த நான்கு கனேடியர்களும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கே தற்போது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்துப் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி (Dr. Bonnie Henry) தெரிவிக்கையில்:

"சம்பந்தப்பட்ட நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட லேசான அறிகுறிகளை வெளிப்படுத்திய நிலையில், அவரும் அவருடன் இணைந்து தனிமைப்படுத்தலில் இருந்த அதே உல்லாசக் கப்பலில் பயணித்த அவரது துணையும் தீவிரமாகப் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்," என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .