Editorial / 2026 மே 17 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிரேஷ்ட ஆங்கில ஊடகவியலாளரும், அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் (D.B.S. Jeyaraj) காலமானார்.
இலங்கை அரசியல், இனப்பிரச்சினை, புவிசார் அரசியல் மற்றும் தமிழ் சினிமா குறித்துப் பல தசாப்தங்களாக ஆழமானதும் காத்திரமானதுமான அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை அவர் எழுதி வந்தார். சர்வதேச அளவில் பரந்த வாசகர் வட்டத்தைக் கொண்ட இவர், தனது எழுத்துக்களின் மூலம் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றவர்.
‘தி ஐலண்ட்’ (The Island), ‘டெய்லி மிரர்’ (Daily Mirror), ‘டெய்லி எஃப்.டி’ (Daily FT) உள்ளிட்ட முன்னனி ஆங்கில நாளிதழ்களில் நீண்டகாலமாகப் பத்திகளை எழுதி வந்ததோடு, தனது பிரத்தியேக அரசியல் இணையத்தளத்தினூடாகவும் (dbsjeyaraj.com) உலக நடப்புகளைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வந்தார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் குறித்த விபரங்கள், குடும்பத்தினரால் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 minute ago
22 minute ago
32 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
32 minute ago
58 minute ago