2026 மே 17, ஞாயிற்றுக்கிழமை

dd

ஹரியானா இளையோர் அணி வந்தடைந்தது

Editorial   / 2026 மே 17 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.கே.ஜி. கபில

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான நட்புமுறை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 14 வயதுக்குட்பட்ட சிறுவர் கிரிக்கெட் அணி கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டை மாலை 04:00 மணியளவில் வந்தடைந்தது.

அதிகாரிகள் உட்பட 17 பேரைக் கொண்ட இந்த அணியினர், இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் 03 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், பயிற்சி அமர்வு ஒன்றிலும் கலந்துகொள்ள உள்ளனர்.

உலகின் முன்னணி விளையாட்டு உபகரண உற்பத்தி நிறுவனமான ‘பெலிக்கன்’ (Pelican) நிறுவனம் இத்தொடருக்கான அனுசரணையினை வழங்கியுள்ளது. அத்துடன், இந்நாட்டு வீர வீராங்கனைகளுக்காகத் தமது 19ஆவது விற்பனை நிலையத்தை இலங்கையில் திறப்பதற்கும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .