2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பஸ்ஸின் அடியில் சிக்கி நடத்துநர் பலி

George   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை ​நகரத்தில் தனியார் பஸ்ஸின் அடிப்பகுதியில் சிக்கி, அந்த பஸ்ஸின் நடத்துநர் பலியாகியுள்ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் சர்சையான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆபத்தை தவிர்க்க பஸ் சாரதி நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில் சிலரால், சாரதி மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலையையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த நடத்துநர் மீதும் குறித்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

பின்னர், நடத்துநரை பஸ்ஸின் ​அடியில் போட்டுள்ளனர். அதனை அறியாத சாரதி, பஸ்ஸை செலுத்தியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .