2026 மே 14, வியாழக்கிழமை

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

Freelancer   / 2024 நவம்பர் 22 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைகின்றன. 
 
இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. 
 
அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. 
 
இதன்படி, அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .