S. Shivany / 2021 ஜனவரி 18 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணப் பாடசாலைகளை மீள திறப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று(18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் பல பிரதேசங்களில், பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கக்கூடிய சூழ்நிலை தற்போது நிலவுகின்றமை குறித்து கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மேல் மாகாணப் பாடசாலைகளின் சகல வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளையும் மீள ஆரம்பிப்பது தொடர்பில், இரண்டு வாரங்களில் சுகாதார வழிகாட்டல்களை தயாரிக்கவுள்ளதாக,; கல்வி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
13 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
20 Apr 2026