Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 03 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இம்மாதம் முதலாம் திகதி நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் இதில் மூவர் பாடசாலை மாணவர்கள் எனவும் எனவே பாடசாலையில் நீச்சல் பயிற்சியைக் கட்டாயமாக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், நீரில் மூழ்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) முல்லைத்தீவு - குமுழமுனை பகுதியில் கோவில் தீர்த்தக்கேணியில் மூழ்கி ரஜிதரன் கிருசிகா, சற்சொரூபநாதன் ரஸ்மிளா ஆகிய பாடசாலை மாணவிகள் , இதுதவிர தாமரைக்குளத்தில் பூப்பறிக்கச் சென்ற இராஜசேகர் நிலாந்தன், சிவநேசன் பிரணவன் ஆகியோருமாக ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் பாடசாலை மாணவர்கள்.
இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள மாணவர்கள் மூவருக்கும் நீச்சல் தெரியாது. இப்படியாக பல மாணவர்கள் நீச்சல் தெரியாத நிலையில் காணப்படுகின்றனர். எனவே பாடசாலைகளில் நீச்சல் தடாகங்கள் அமைத்து மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சிகளை வழங்கினால் நல்லது என எண்ணுகின்றேன். தயவுசெய்து இந்த விடயத்தை கவனத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.
விஜயரத்தினம் சரவணன்
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago