2026 மே 02, சனிக்கிழமை

’பாடம் கற்பிக்க தனக்குத் தெரியும்’

R.Maheshwary   / 2021 மார்ச் 22 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் அரசர்களும் இல்லை. மகாராஜாக்களும் இல்லை. மகாராஜாக்கள் இந்தியாவில் தான் இருந்தார்கள். இங்கு ஊடக மாபியாவே இடம்பெறுகின்றது எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அது என்னிடம் முடியாது. அதற்கு பாடம் கற்பிக்கவும் தெரியும். பாடம் கற்பிக்கும் முறையும் தனக்கு தெரியும் என்றார்.

தாம் சுற்றாடலை நேசிப்பதாகவும் ஒருபோதும் சுற்றாடலை அழிக்க விரும்பியதில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, பாரிய பதாதைகளை ஏந்தி  சுற்றாடலைப் பாதுகாக்க முடியாது என்றார்.

நுவரெலியா- வலப்பனையில் நேற்று முனதினம் (20) நடைபெற்ற கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் கொழும்பில் குவிந்த குப்பைகளை, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கொழும்பு மற்றும் சன நெரிசல் மிக்க பகுதிகளை செழிப்பாக்கியதாக தெரிவித்த ஜனாதிபதி, மரங்களை நட்டு, பூங்காக்களை உருவாக்கி ஈர வலயங்களைப் பாதுகாத்து வெள்ள அபாயத்தை கட்டுப்புடுத்தியதாகவும் தெரிவித்தார்.

பரம்பரை பரம்பரையாக பயிர்செய்கை செய்த நிலங்களை அரசாங்கம் கொள்ளையிட்டுள்ளதாக கிராம மக்கள் சிலர் தம்மிடம் முன்வைத்த குற்றச்சாடடுகளை ஆராயுமாறு. வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு பணித்துள்ளதாகவும் இதன் காரணமாகவே தாம் காடுகளை அழிப்பதாக தன்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும்  தெரிவித்துள்ளார். 

அதேப்போல் ஊடக நிறுவனங்களில் புதுமையானவர்களே உள்ளனர் எனத் தெரிவித்த ஜனாதிபதிஇ ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவனத்தின் உரிமையாளரின் சுதந்திரம் அல்ல. அதுவல்ல சுதந்திரம். அது ஒரு மாபியாகும். மாபியா ஊடக உரிமையாளர்களுக்கு தேவையான விதத்தில் நாட்டைக் கொண்டு செல்ல முயற்சிப்பதாக இருந்தால் அதுதான் முடியாத காரியமாகும் என்றார். 

தான் தாராளமாக ஊடக சுதந்திரத்தை வழங்கியுளளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 14 மாதங்கள் நாட்டை நிர்வகித்துள்ளதாகவும் குறித்த கலப்பகுதிக்குள் எந்தவொரு ஊடகத்துக்கும் எவ்வித அழுத்தத்தையும் விடுக்கவில்லை. எனினும் அதனை அவர்கள் தவறாகப் பயன்படுத்தினால் அதற்கும் சட்டங்கள் உள்ளன. அதனை தான் செயற்படுத்துவேன் எனத் தெரிவித்த அவர், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமக்தெதிராக செயற்பட்ட குழுவினரே இன்றும் மீண்டும் எழுந்துள்ளனர் என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .