2026 மே 02, சனிக்கிழமை

பாணியைக் கைவிட தம்மிக முஸ்தீபு

Editorial   / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவதற்காகவே பாணியைத் தயாரித்ததாகத் தெரிவித்த கேகாலை தம்மிக பண்டார, குறித்த பாணி உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

குறித்த மருந்து தயாரிப்புக்காக தனது சொந்த பணத்திலிருந்து 2 மில்லியன் ரூபாய் செலவாகியுள்ளது என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையின் கீழ், தனக்காக எவரும் முன்வராமை காரணமாக, இந்த மருந்து தயாரிப்பிலிருந்து விலகுவதாக, வரக்காபொல பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்டவர்களிடம் தம்மிக பண்டார அறிவித்துள்ளார்.

எனினும், தான் வசிக்கும் பிரதேசத்திலுள்ள அனைவருக்கும் இந்த மருந்தை வழங்கிய பின்னர், இந்த மருந்து தயாரிப்பை முழுமையாக கைவிடுவதாகவும் அறிவித்துள்ளார்.

எனவே, இந்தப் பாணி தொடர்பில் அதிகாரிகள் உரிய பரிசோதனையை முன்னெடுக்க வேண்டுமென்று, வரக்காபொல பிரதேச சபையின் தவிசாளர், ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .