2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

பாதுகாப்புக்கு உத்தரவாதம் கேட்கிறார் சிறிதரன்

Freelancer   / 2024 ஜூலை 10 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்னையும் எனது குடும்பத்தையும் இலக்கு வைத்து அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் எனதும் எனது குடும்பத்தின் பாதுகாப்புக்கும் சபாநாயகர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (09)  இடம்பெற்ற இலங்கை தொலைத்தொடர்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்த அவர் மேலும் பேசுகையில்,  
 
இந்துக்கல்லூரி ஒழுங்கை, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள எனது வதிவிட இல்லத்திற்கு முன்னால் கடந்த 28 ஆம் திகதி  கருப்புத்துணியால் இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்கள் வந்துநின்றன.

வெள்ளிப்பிடியிட்ட வாள்கள் ,கூரிய ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து வந்த 12 பேர் பாடசாலை நேரமான காலை 8 .05 மணியளவில்   நடமாடினர். இந்த நடமாட்டம் எனது குடும்பத்தினரையும் அவ்வீதியில் வசிக்கும் ஏனைய பொது மக்களையும் அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததை இந்த சபையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.  

  இது எனதும் எனது குடும்பத்தினரினதும் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே  இது தொடர்பில் சபாநாயகர் உயர்ந்த கரிசனை கொண்டு மேற்குறித்த சம்பவங்களின் பின்னணி  குறித்து ஆராய்ந்து முறையான விசாரணை நடத்த ஆவன செய்து எனதும் எனது குடும்பத்தின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X