Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 10 , மு.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட பின்னர் வைத்தியர்களால் இறந்ததாகத் தெரிவிக்கப்பட நீர்கொழும்பைச் சேர்ந்த 40 வயதான மீனவரொருவர் உயிருடன் திரும்பியுள்ளார்.
மூர்ச்சையற்று இருந்து குறித்த நபர், வைத்தியசாலையிலுள்ள வெளிநோயாளர் பிரிவிலுள்ள வைத்தியர்களால் இறந்ததெனக் கூறப்பட்டுள்ளார்.
பின்னர் குறித்த நபரது சடலமானது வைத்தியசாலை பிணவறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து பிணவறைக்கு குறித்த நபரது உறவினர்கள் வந்ததையடுத்தே குறித்த நபர் உயிருடனிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அந்நபர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
உடலில் குறைந்தளவு சீனி மட்டம் காரணமாக குறித்த நபர் கோமாவுக்குச் சென்றதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபரை இறந்ததாகக் கூறிய வைத்தியருக்கெதிராக ஒழுக்க விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
50 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago