2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படும்

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களின் பெயர்ப் பட்டியலை எதிர்வரும் வாரங்களில்  பிரபலப்படுத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியே வரும்போது யார்யார் இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் என்று தெரிந்துக்கொள்ள முடியும் என்றார்.

தற்போது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் குறித்த விடயம் வெளியிடப்பட்டவுடன் இந்த ஆர்ப்பாட்டங்களை நிறுத்தி விடுவரென்றும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே ரணிலை மீண்டும் பிரதமராக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன தெரிவித்தாகவும் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .