Editorial / 2017 நவம்பர் 22 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் தமக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்து, சர்வதேச நாடாளுமன்றத்தில் முறைப்பாடு செய்யவுள்ளேன்” என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய திறைசேரி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிப்பதற்காக, திங்கட்கிழமை சென்றிருந்த பிரதமர் விக்கிரமசிங்க, தம்மைக் குறிப்பிட்டு, சட்ட மா அதிபருக்கு அழுத்தம் பிரயோகித்திருந்ததாகவும் அவர் இதன்போது கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சின் மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘திறைசேரி பிணைமுறி விவகாரம் பற்றி விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குச் சாட்சியமளிக்கச் சென்றிருந்த பிரதமர் விக்கிரமசிங்க, மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்பான கோப்புகளை இப்படியாக, சரியாக செய்கிறீர்களா என்று சட்ட மா அதிபரிடம் கேட்டுள்ளார். அப்படியென்றால், நாட்டில் சட்டத்தை பிரதமரா செயற்படுத்துகின்றார்? ஆகவே, சட்டமா அதிபருக்குக் கொடுக்கப்பட்ட இந்த அழுத்தம் தொடர்பில், சர்வதேச நாடாளுமன்றத்தில் முறைபாடு செய்யவுள்ளேன். எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் முடிந்தளவிலான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்” என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
“எம்.பி.க்கள் சிறை செல்வதற்குப் பிரதமரே, சட்டமா அதிபருக்கு உத்தரவு வழங்குவார் என்றால் இந்த நாட்டில் ஜனநாயகம் பற்றிப் பேசிப் பலன் கிடையாது” என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.
“எவ்வாறிருப்பினும், அரசாங்கம் என்பது மாற்றம் காணும் ஒன்றெனச் சுட்டிக்காட்டிய அவர், நீங்களும் இதேபோன்று சிறைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும்” என்றும் ஆளுந்தரப்பினரை நோக்கித் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago