Nirshan Ramanujam / 2017 நவம்பர் 23 , மு.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஆட்சிக்காலத்தில் இரகசியமாகக் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்தை முற்றாக மறுத்துள்ள ஒன்றிணைந்த எதிரணியினர், பிரதமரது கூற்று தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதம் ஒன்றை, நேற்று (22) கையளித்தனர்.
ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் கையொப்பமிட்டு, அந்தக் கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
“கடந்த ஆட்சிக்காலத்தில் சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து இரகசியமாகக் கடன் பெற்றுக்கொண்டுள்ளதாக மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாட்சியம் அளித்துள்ளார். இது தொடர்பில் அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
“அரசாங்கம் என்ற வகையில் வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் அது, மத்திய வங்கியின் கணக்கறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும். அவ்வாறு கணக்கறிக்கைகளின் ஊடாக வெளியிடப்படாத வகையில் கடன் எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை. ஆதலால், ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து அடிப்படையற்ற, பொய்யானதொன்றாகும். எனவே, இது தொடர்பில் சபாநாயகர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, உண்மை நிலைவரம் எதுவென்பதை, நாடாளுமன்றுக்குத் தெரியப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
03 Nov 2025